Content Status

Type

Linked Node

H5Content
Content

முதல் நிலை மருந்துக்கு கட்டுப்படும் காசநோய்க்கான (DSTB) சிகிச்சை காலங்கள் 

முதல் நிலை மருந்துக்கு கட்டுப்படும் காசநோய்க்கான சிகிச்சைக் காலம் 6-9 மாதங்கள் ஆகும்  . நோயாளியின் வயது, காசநோய் தொற்றின் வகை மற்றும் அதற்கு முன் அவர் சிகிச்சை பெற்றாரா என்பதைப் பொறுத்து பயன்படுத்தப்படும் கால அளவு மற்றும் மருந்தின் அளவு மாறுபடலாம்.

நிலையான 6 மாத சிகிச்சையானது இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது.

தீவிர சிகிச்சை காலம் (Intensive Phase- IP)

தீவிர சிகிச்சை காலமான முதல் 2 மாதங்களுக்கு காச நோய்க்கான முதல் நிலை மருந்துகள் (HRZE) கூட்டு மருந்தாக வழங்கப்படுகிறது

தொடர் சிகிச்சை காலம் (Continuation Phase);

  • இரண்டாவது கட்டம் 4 மாதங்கள் நீடிக்கும்
  • இக்கட்டத்தில் மூன்று வகையான மருந்துகள் (HRE) கூட்டு மருந்தாக வழங்கப்படும்

தொடர் சிகிச்சை நீட்டிப்புக் காலம்:

தொடர் சிகிச்சை முடியும் போது மருத்துவர் நோயாளிகளுக்கு மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மருந்துகள் வழங்க முடிவு செய்தாலோ அல்லது சில வகையான காச நோய்க்கு மேலும் சிகிச்சை எடுக்க வேண்டி இருந்தாலோ தொடர் சிகிச்சை காலம் மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள்  நீட்டிக்கப்படலாம்.

 

Content Creator

Reviewer

Target Audience