Content Status

Type

Linked Node

H5Content
Content

வீடுகளுக்குச் சென்று காசநோயாளிகளை சந்தித்தல்:

சிகிச்சையின் போக்கைப் பற்றியும், அது குறித்த நோயாளியின் புரிதலையும் குடும்ப உறுப்பினர்களின் மனப்போக்கையும் அறிந்து கொள்வதற்கு சுகாதார பணியாளர்கள் / தன்னார்வலர்கள் காசநோயாளிகளின் வீடுகளுக்கு செல்வது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

வீட்டிற்கு செல்லும் போது கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.

காசநோயாளி என கண்டறிந்து அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் சுகாதாரப்பணியாளர்கள் அவர்களது வீட்டிற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.

பாதகபமான மருந்து எதிர்வினை (அதாவது ஏடிஆர்)/முற்றுபெறாத சிகிச்சை/ பின்தொடர்வதில் இழப்பு/மீண்டும் வருதல், சிகிச்சையில் குறுக்கிடப்பட்ட நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நிகழ்வில், பழைய காசநோயாளிகள், காசநோய் மருந்துகளுக்கு பக்க விளைவு ஏற்பட்டவர்கள், சிகிச்சையை முழுமையாக முடிக்காதவர்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியாதவர்கள் போன்றவர்களுக்கு சுகாதார பணியாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் சுகாதார பணியாளர்கள் நோயாளியின் வீடுகளுக்கு செல்லும் போது ஒரு குழுவாக செல்வது நலம் பயக்கும்.


 

Image
home visit

Content Creator

Reviewer

Target Audience